உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் வசூல்.? வெளியான தகவல்..!

Author: Mari
21 May 2022, 5:26 pm
Quick Share

தமிழ் சினிமாவில், பிரபல நடிகராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்தியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த திரைப்படம். தமிழக மக்களுக்கு ஏற்றாற்போல திரைக்கதையில் மாற்றம் செய்து படத்தினை இயக்கி இருந்தார் அருண்ராஜா காமராஜ்.

தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் நாளில் மட்டும் இந்தப் படம் 1.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Views: - 207

4

0