பெருங்களத்தூரில் மீண்டும் ஒரு முதலை நடமாட்டம்… சமூக வலைதளத்தில் வைரலான குட்டி முதலையின் வீடியோ : வனத்துறை வெளியிட்ட விளக்கம்

Author: Babu Lakshmanan
2 January 2024, 10:21 am

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் சாலையின் ஓரம் கிடந்த குட்டி முதலையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மாவட்டமே வெள்ளத்தில் தத்தளித்தது. குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு துண்டிக்கப்பட்டது. இந்த மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் பகுதியில் 7 அடி முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கம் அளித்த வனத்துறையினர், இது சதுப்பு நிலத்தில் காணப்படும் மக்கர் வகை முதலை என்றும், இது மனிதர்களை ஒன்றும் செய்யாது என விளக்கமளித்தது.

இந்த நிலையில், சென்னை பெருங்களத்தூரில் சாலையில் ஓரத்தில் ஒரு குட்டி முதலை படுத்து கிடக்கும் வீடியோ வெளியாகி பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது. வீடுகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கினர். மழை வெள்ள பாதிப்புகள் ஒரு புறம் இருக்க சென்னை பெருங்களத்தூரில் குடியிருப்பு பகுதியில் சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலை சாலையில் சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 1.5 அடி நீளம் கொண்ட பிறந்த சில நாட்களே ஆன இந்த முதலையை வனத்துறையினர் மீட்டு கிண்டி பூங்காவில் விட்டுள்ளனர்.

இதுவும் சதுப்பு நிலத்தில் காணப்படும் மக்கர் வகை முதலை என்றும், பெருங்களத்தூரில் காணப்பட்ட 5வது முதலை எனக் கூறிய வனத்துறையினர், இவற்றால் மனிதர்களுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது எனக் கூறியுள்ளனர்.

  • Seenu Ramasamy divorce reasons இளம் நடிகைகளுக்கு குறி…இயக்குனர் “சீனு ராமசாமி” விவாகரத்தின் பின்னணி… பகிரங்கமாக பேசிய பயில்வான்..!
  • Views: - 416

    0

    0