தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பலியான வடமாநில வாலிபர் : விசாரணையில் திக்.. திக்.. திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2023, 7:22 pm

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள வாடிப்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பகலில் திடீரென நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை பார்த்த பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வத்தலகுண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பொழுது தீ விபத்தில் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற கூலித் தொழிலாளி உடலில் தீக்காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் மில்லில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?