முகமது நபிகள் குறித்து சர்ச்சை… நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக முகநூல் பதிவு : கோவையில் ஏ.பி.வி.பி இளைஞர் கைது!!

Author: Babu Lakshmanan
15 June 2022, 10:46 am

கோவை : முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட, கோவையை சேர்ந்த ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது உத்தரபிரதேசத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை சென்னனூரை சேர்ந்த ஏ.பி.வி.பி. நிர்வாகியும், பாஜக ஆதரவாளருமான கார்த்திக் (26) என்ற இளைஞர் தனது முகநூலில் நுபுர் சர்மாவை ஆதரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!