இறந்து போன அத்தையின் உடலை புதைக்க எதிர்ப்பு… போராட்டம் நடத்திய கர்ப்பிணி பெண் மானபங்கம் : குமரியில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2023, 8:31 pm
Lady
Quick Share

இறந்து போன அத்தையின் உடலை புதைக்க எதிர்ப்பு… போராட்டம் நடத்திய கர்ப்பிணி பெண் மானபங்கம் : குமரியில் அதிர்ச்சி!!

கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் உதயா வழக்கறிஞரான இவரது கணவர் நவின் சென்னையில் ஓரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் நிலையில் உதயாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

3-மாத கர்பிணியான இவர் கழிந்த டிசம்பர் 2-ம் தேதி தனது மகனின் முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக உதயா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சென்னையில் இருந்து சொந்த ஊரான பிள்ளைத்தோப்பிற்கு வந்துள்ளார்.

அப்போது புற்றுநோய் பாதிப்பில் சிகிட்சை பெற்று வந்த உதயாவின் அத்தை மேரி சுபா ரேவிதா என்பவர் கடந்த 13-ம் தேதி புதன் கிழமை அன்று உயிரிழந்தார்.

அவரது இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டு இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை உதயா உட்பட உறவினர்கள் செய்து வந்துள்ளனர். ஆனால் உயிரிழந்த மேரி சுபா ரேவிதாவின் உறவினர் ஒருவருக்கும் ஊர் நிர்வாகதிற்கும் இடையே நிலவி வந்த நிலத் தகராறை காரணம் காட்டி பங்கு தந்தை மற்றும் ஊர் நிர்வாகத்தினர் கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் மேரி சுபா ரேவிதாவின் உடலை புதைக்க மறுப்பு தெரிவித்தனர்

மனமுடைந்த உறவினர்கள் ஆயர் இல்லம், மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் முறையிட்டும் சாலை மறியல் செய்தும் ஊர் நிர்வாகம் அவரது சடலத்தை புதைக்க மறுப்பு தெரிவித்த நிலையில் உறவினர் ஒருவரின் பட்டா நிலத்தில் புதைத்துள்ளனர்.

ஆனால் மனம் தளராத வழக்கறிஞரான உதயா தனது சக வழக்கறிஞர்கள் உதவியுடன் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து சட்ட போராட்டம் நடத்தி உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று கடந்த 16-ம் தேதி பட்டா இடத்தில் புதைத்த தனது அத்தை மேரி சுபா ரேவிதாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து ஊர் மயானத்தில் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தார். இதனால் ஊர் நிர்வாகத்தில் ஒட்டு மொத்த கோபமும் வழக்கறிஞர் உதயா மீது திரும்பியுள்ளது.

இந்த நிலையில் 21-ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை பிள்ளைத்தோப்பில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து உதயா தனது குழந்தையுடன் காரில் உறவினர் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்ல புறப்பட்டுள்ளார்

உதயா காரில் ஏறி ஸ்டார்ட் செய்த போது உறவினர் இடது புற முன் இருக்கையில் அவரது குழந்தையை அமர வைக்க முற்பட்ட போது பின்னால் இருந்து பைக்கில் மனைவியுடன் வந்த பிரபாகரன் என்பவர் கார் டோரில் வேண்டுமென்றே மோதி பைக்கை நிறுத்தி விட்டு காருக்குள் இருந்த வழக்கறிஞர் உதயாவிடம் வம்பிழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்

வாழக்கறிஞருக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் வழக்கறிஞருக்கு எதிராக ஊரே திரண்டு சண்டையிட தடுக்க வந்த வழக்கறிஞரின் கணவர் நவின் ஐ தாக்கியதோடு வழக்கறிஞரை கீழே தள்ளி விட்டு காலால் மிதித்து அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதோடு காதில் கிடந்த தோடுகளையும் பறித்து அவரது சுடிதார் உள்ளிட்ட ஆடைகளை கிழித்து அரை நிர்வாணத்தில் ஓடவிட்டனர்.

வழக்கறிஞர் உதயாவின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலர் பதில் தாக்குதல் நடத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்டி காயமடைந்து அரை நிர்வாணத்தில் நின்ற வழக்கறிஞர் உதயாவை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து வழக்கறிஞர் உதயா சிசிடிவி ஆதாரங்களுடன் தன்னை தாக்கிய பிரபாகரன் அவரது மனைவி ஸ்ரீஜா, ஜார்ஜ் அவரது மனைவி கோசினி ஆகியோர் மீது வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரின் பேரில் அந்த நான்கு பேரின் மீதும் பெண் வன் கொடுமை, கொலை மிரட்டல், கூட்டு சதி, உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் அதே வேளையில் உதயா தன்னை குடும்பத்தினருடன் தாக்கியதாக ஜார்ஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் உதயா அவரது கணவர் நவின் உட்பட 5-பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்

அத்தையின் சடலத்தை புதைக்க சட்ட போராட்டம் நடத்திய கற்பிணி பெண் வழக்கறிஞரின் காரில் வாலிபர் மோதி வம்பிழுத்து தாக்கும சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Views: - 893

0

0