கட்டு கட்டாக பழைய ரூ.500, ரூ.1000 செல்லாத நோட்டுகள்… ரூ.1 கோடி பறிமுதல் ; பிரபல ரவுடி கைது…!!

Author: Babu Lakshmanan
24 May 2024, 5:14 pm
Quick Share

சேலம் அம்மாபேட்டை அருகே கஞ்சா சோதனையின் போது பிரபல ரவுடி வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் அம்மாபேட்டை ராமலிங்கம் தெரு பகுதியை சேர்ந்தவர் சபீர் (32). இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், சபீர், பாலாஜி, கோகுலநாதன் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது இவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.

மேலும் படிக்க: தூக்கத்தில் இருந்து எழுந்திருங்க…கூட்டணி கட்சி-னு பார்க்காமல் தமிழக உரிமையை காப்பாற்றுங்க ; இபிஎஸ் அழுத்தம்

இதனை தான் மாற்றிக் கொடுப்பதாக சபீர் தனது பங்குதாரர்களிடம் கூறி செல்லாத நோட்டுகளை வாங்கியதாக தெரிகிறது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனிடையே, பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். பல ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார்.

அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும் இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அந்த பணத்தை கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்லுமாறும் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன், சபீர் மாசி நாயக்கன் பட்டியில் உள்ள அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பிரபல ரவுடி சபீர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் செல்லாத 1000 ரூபாய் 500 ரூபாய் தாள்களை இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, ஆயிரம் மற்றும் 500 ரூபாய் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்த சபீரைரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 264

0

0