ஆரத்தி எடுத்ததுக்கு காசு தரல…. வண்டிய விட மாட்டோம் ; திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் மூதாட்டி புலம்பல்..!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 2:38 pm
Quick Share

குமாரபாளையம் அருகே திமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது, ஆரத்தி எடுத்த மூதாட்டி தட்டில் பணம் போடவில்லை என்று புலம்பிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

அப்பொழுது, அவரை வரவேற்கும் விதமாக பெண்கள் பலரும் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர், அவர் பொது மக்களிடையே பிரச்சாரம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

இந்நிலையில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க வில்லை எனக் கூறி அப்பகுதி மூதாட்டி ஒருவர் அங்கிருந்த அனைவரிடமும் கேட்டுள்ளார். பின்னர், ஆரத்தி எடுத்த தட்டிற்கு பணம் போடாமல் சென்று விட்டனர் என புலம்பி தீர்த்தார். இந்த வெயிலில் ஆரத்தி எடுக்கத்தான் காத்தி கிடந்தோமா..? என்றும், போன முறை 50 ரூபாய் கொடுத்து விட்டு, இப்போது எதுவும் கொடுக்காமல் சென்று விட்டதாகவும், தலைவரிடம் சொல்லி பணத்தை வாங்கி தருமாறு கேட்டுக் கொண்ட அந்த மூதாட்டி, வண்டியை விட மாட்டோம் என்று எச்சரித்தனர்.

மூதாட்டி புலம்பும் சம்பவம் குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 190

0

0