சாலையோரம் நின்றிருந்த பஞ்சர் ஆன லாரி…அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்து, கார்: 2 பேர் பலி…14 பேர் படுகாயம்..!!

Author: Rajesh
19 April 2022, 9:13 am
Quick Share

விருதுநகர்: மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சர் ஆன லாரியின் மீது ஆம்னி பஸ்சும் காரும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவில் லாரி மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பஞ்சர் ஆனதால் லாரி ஓட்டுநர் ஓரமாக நிறுத்தி மாற்று டயர் மாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் திசையன்விளையில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் நின்றுகொண்டிருந்த லாரியில் பின்னால் அதி வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

அதே வேகத்தில் பின்னால் வந்த கார் ஆம்னி கார் பின்னால் அடுத்தடுத்து மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆம்னி பஸ் மற்றும் காரில் பயணம் செய்த பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், ஆம்னி பேருந்தில் பயணம் செய்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிதாகூர் (40) உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்னி பஸ் ஓட்டுநர் தூத்துக்குடியை சேர்ந்த உதயகனி மற்றும் பேருந்தில் பயணம் செய்து தங்கமாரியப்பன் ஆகிய இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தால் மதுரை – தூத்துக்குடி நான்கு வழி சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 649

0

0