கேப்டன் மறைந்து 30வது நாள்… தேமுதிகவை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து அஞ்சலி!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 3:18 pm
Mottai
Quick Share

கேப்டன் மறைந்து 30வது நாள்… தேமுதிகவை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து அஞ்சலி!

தேசிய முற்ப்போக்கு திராவிட கழக முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் -28ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனால் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது இதனால் சென்னை தேமுதிக கட்சி அலுவலகம், இராஜஜி திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்க்காக வைக்கப்பட்டது அப்போது தமிழக முதல்வர் , மத்திய அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என 25 லட்சத்துக்கும் மேல் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தனர். பின்பு சென்னை தேமுதிக தலைமை கழக கட்சி அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் பூத உடல் புதைக்கப்பட்டது.

தற்போது வரை அங்கு தினந்தோறும் 1000 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையின் கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்று உடன் 30 நாள் ஆகிறது.

இதனால் இன்று தேமுதிக மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி பா. மணிகண்டன் தலைமையில் மேல ஆவணி மூல விதி பகுதியில் உள்ள மதுரை தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு கேப்டன் விஜகாந்த் படத்திற்கு முன்பு 30க்கும் மேற்ப்பட்டோர் மொட்டை அடித்து, மலர்கள் துவி விளக்கு ஏற்றிய தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர் இதில் நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 1000 க்கும் மேற்ப்பட்ட பொது மக்களுக்கு அண்ணதானம் வழங்கினர்.

முன்னதாக ஜெய்ஹிந்த்புரத்தில் தேமுதிக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Views: - 1595

0

0