தமிழகத்தில் அதிர்ச்சி… ஊட்டி மலை திடீரென தடம்புரண்டு விபத்து… நடுவழியில் பயணிகளால் பரிதவிப்பு…!!!

Author: Babu Lakshmanan
8 June 2023, 7:35 pm

குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற ஊட்டி மலை ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மதியம் 2 மணி அளவில் மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மலை ரயில் புறப்பட்டது. குன்னூர் வந்தடைந்ததும் மூன்று முப்பது மணி அளவில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல இருந்தது.

இந்நிலையில் குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து மொத்தம் 174 பயணிகளுடன் மேட்டுப்பாளையம் செல்ல புறப்பட்டபோது, ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் கடைசி பெட்டியின் இரு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழ் இறங்கியது.

இதனால், பயணிகள் பீதியடைந்தனர். அதேவேளையில், அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பித்தனர். இதனால், இரண்டு மணி நேரம் ஆகியும் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் அமர்த்த முடியாததால், பயணிகளை ரயில்வே நிர்வாகம் அரசு பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்தது.

பின்பு பொக்லைன் உதவியுடன் ரயில் பெட்டியை தண்டவாளத்தில் ஏற்றினர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?