வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு… பஞ்சப்பிரதேசமாக மாறும் தமிழகம் ; அலறி துடிக்கும் வைகோ…!!

Author: Babu Lakshmanan
8 June 2023, 7:21 pm
Vaiko - Updatenews360
Quick Share

மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும் என்றும், கபினி, கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை செக்கானூரணியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை 44வது வார்டு மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வியின் பேரனுக்கு ஆதித்த கரிகாலன் என்று பெயர் சூட்டினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- ஒடிசா ரயில் விபத்து தொழில் நுட்ப கோளாறு மற்றும் சதி என குளறுபடி குறித்த கேள்விக்கு:- ரயில்வே துறை வரலாற்றிலே மிக கொடூரமான, கோரமான விபத்து ஒடிசாவில் ஏற்பட்டது. இது தொழில்நுட்ப கோளாறா..? அல்லது சதி வேலையா…? என்பது பிரச்சனைக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்படி சதி வேலையாக இருக்குமானால் அதை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள், 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே ரயில் பயணம் என்பதே ஆபத்தை உண்டாக்கும் என்கிற பயத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்த சூழலில் இதை தீவிரமாக ஆய்வு செய்து உண்மை காரணத்தை கண்டுபிடித்து, அதற்குகான காரண கர்த்தாவிற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து, என தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:- 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரைத் திரட்டி நான் போராட்டம் நடத்தினேன். அப்போதே மேகதாதுஅணை கட்டியே தீருவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பணமும் ஒதுக்கப்பட்டு விட்டது, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு அதை வேடிக்கை பார்க்கும். அது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும். கபினி, கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும். தலைக்கு மேலே கத்தி போல தொங்கி கொண்டிருக்கும் பேராபத்து. மத்திய அரசு இதில் வஞ்சகம் செய்யும் என்பதுதான் என் குற்றச்சாட்டு என்றார்.

ரயில் விபத்து விவகாரத்தில் தமிழக அரசு செயல்பாடு குறித்த கேள்விக்கு: மீட்பு பணிகள் எல்லாம் மிகவும் துரிதமாக நடைபெற்றது. அமைச்சர்கள், அதிகாரிகளை அனுப்பி வைத்து உடனடியாக தேவையான காரியங்களை செய்து மீட்பு பணிகளை தமிழக அரசு பாராட்டக்கூடிய வகையில் செய்திருக்கிறது, என வைகோ கூறினார்.

Views: - 303

0

0