ஏரிக்கரையில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை… துப்பு துலக்கிய போலீசார் ; கையும், களவுமாக சிக்கிய தந்தை, மகன்..!!!

Author: Babu Lakshmanan
25 April 2024, 4:32 pm

பொன்னமராவதி அருகே கழுத்து அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஞ்சுலிபட்டியைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அஞ்சுபுளிப்பட்டியை சேர்ந்த ராமன் மகன் அடைக்கப்பன் (வயது 24). இவர் கோயம்புத்தூரில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாளன்று வாக்கு செலுத்துவதற்காக தனது சொந்த ஊரான அஞ்சுபுளிப்பட்டிக்கு வந்துள்ளார்.

அங்கு அஞ்சுபுளிப்பட்டியை சேர்ந்த காத்தானுக்கும், அடைக்கப்பனுக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு காத்தான் குடும்பத்தாரிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த காத்தான் வயது (61) மற்றும் அவரது மகன் கதிரவன் (வயது 21) ஆகிய இருவரும், மது அருந்த சென்ற அடைக்கப்பனை அரையாண்டிபட்டி கண்மாய் கரையில் கத்தியால் உடம்பில் பல்வேறு இடங்களில் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

மேலும் படிக்க: மதுபோதையில் மகனுக்கு நேர்ந்த கதி.. தந்தை அதிரடி கைது : கோவையில் Shock!!

இந்த நிலையில், மறுநாள் அந்த வழியாக வந்த பொதுமக்கள் சம்பவத்தை பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் பொன்னமராவதி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கொலை செய்தது அஞ்சுபுளிப்பட்டியை சேர்ந்த காத்தான் மற்றும் அவரது மகன் கதிரவன் என தெரிய வந்தது.

இந்நிலையில் கொலையாளிகள் இருவரையும் கைது செய்து பொன்னமராவதி போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 347

    0

    0