தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 6 மாத குழந்தை கடத்தல்.. SKETCH போட்ட டிப் டாப் லேடீஸ் : 24 மணி நேரத்தில் TWIST!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2024, 5:14 pm
Kidnapped
Quick Share

தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 6 மாத குழந்தை கடத்தல்.. SKETCH போட்ட டிப் டாப் லேடீஸ் : 24 மணி நேரத்தில் TWIST!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி (39) என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மதுரை ரயில்வே நிலைய பகுதியில் யாசகம் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மேலமாசி வீதி பகுதியில் பள்ளிவாசல் முன்பாக யாசகம் பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மேலமாசி வீதி பகுதியில் சுந்தரி தனது மகன் பாலமுருகன், தனலெட்சுமி,சக்திபிரியா ஆகிய 3 குழந்தைகளுடன்
படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணி எழுந்துபார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தையான சக்திபிரியாவை காணவில்லை, அப்போது பதட்டமடைந்த சுந்தரி அருகில் அங்கும் தேடியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த சுந்தரி் தனது 6 மாத பெண் குழந்தை காணாமல் போனது குறித்து திடிர்நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் மேலமாசி வீதி பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுமேற்கொண்டு நடத்தியுள்ளனர்

அதில் இரு பெண்கள் ஸ்கூட்டியில் வந்து தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்திசென்றது தெரியவந்துள்ளது.

p> மேலும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மீண்டும் சிக்கல்.. 35வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

இதனையடுத்து சிசிடிவி காட்சியனை காண்பித்து குழந்தையின் தாயார் சுந்தரியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் இரு பெண்கள் தன்னிடம் வந்து பெண் குழந்தை தந்தால் பணம் தருவதாக கூறி குழந்தையை கேட்டதாகவும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து கடந்த வாரம் இரு பெண்களும் வந்த ஸ்கூட்டியின் பதிவெண் அடிப்படையில் அவர்களின் வீட்டு முகவரிக்கு சென்று அங்கிருந்து கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.

இதையடுத்து பெண் குழந்தையை கடத்தியதாக மதுரை மேல பனங்காடியை சேர்ந்த செந்தாமரை என்ற பெண்ணும் அவரது உறவினரான மதுரை சோழவந்தான் அருகே இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி ஆகிய இரு பெண்களையும் திடீர்நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த வாரம் இருவரும் சுந்தரியை சந்தித்து குழந்தையை கேட்ட நிலையில் சுந்தரி தர மறுத்த நிலையில் நேற்று முன்தினம் உறங்கிகொண்டிருந்த சுந்தரியின் 6 மாத பெண் குழந்தையை பணத்திற்கு விற்பனைக்காக கடத்தியது தெரியவந்துள்ளது.

சாலையோரம் உறங்கிகொண்டிருந்த தாயாரிடம் இருந்து 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட புகாரில் 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட திடீர்நகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படை காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாரட்டினார்.

Views: - 108

0

0