‘நீங்க ஏன் ப்ளாக்ல விக்கிறீங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜி உங்க கிட்ட காசு கேட்டாரா..?’ டாஸ்மாக் ஊழியரிடம் மதுப்பிரியர் வாக்குவாதம்..!!!

Author: Babu Lakshmanan
9 June 2023, 8:24 am
Quick Share

திருவாரூரில் மதுபானத்தை பிளாக்கில் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர், கடையை சாத்திவிட்டு மதுபிரியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் அருகே உள்ள கங்களாஞ்சேரி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக்கில் மதுப்பிரியர் ஒருவர் தனது செல்போன் கேமராவை ஆன் செய்துவிட்டு விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நாங்க எவ்வளவு பணம் கொடுத்தோம். இன்னும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்டவுடன், கேமரா ஆனில் இருப்பதை அறிந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர் சுதாரித்துக் கொண்டு, 150 ரூபாய் கொடுத்தீர்கள் 130 ரூபாய் போக 20 ரூபாய் திருப்பிக் கொடுத்தேன் என்று கூறுகிறார்.

தொடர்ந்து, நீங்க கடன் கேக்குறீங்க இப்ப. கல்ல எடுத்து கேட்ல அடிக்கிறீங்க. என்ன செய்யணும் இப்ப என்று டாஸ்மாக் ஊழியர் எகிற, நீங்க ஏன் சரக்க பிளாக்ல விக்கிறீங்க. பில்லு கொடுங்க பிளாக்குல வியாபாரம் பண்றீங்களா..? கவர்மெண்டுக்கு வியாபாரம் பண்றீங்களா..? யாரு கல்ல விட்டு அடிச்சா என்று மதுப்பிரியர் கேட்டுள்ளார்.

அதற்கு, டாஸ்மாக் ஊழியர், நீங்க மூணு பேரும் தான் கல்ல விட்டு அடிச்சீங்க. கேமரா எடுத்துக்கிட்டு கடன் கேட்டா கொடுக்கணுமா..? என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

அதற்கு மதுப்பிரியர் 500 கடைய இப்ப அரசாங்கம் மூட சொல்லி இருக்காங்க என்று கூறியவுடன், ஊழியர் அப்ப இந்த கடைய மூடனும்னு சொல்றீங்களா என்று கடையை விட்டு வெளியில் வந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதற்கு மதுப்பிரியர் நாங்க கல்லை விட்டு எரிந்தால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமிரா இருக்கு அதனை பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் மீது வழக்கு தொடுங்கள். செந்தில் பாலாஜி உங்களிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்குகிறாரா..? எதற்காக நீங்கள் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குறீர்கள் என ஒருவருக்கொருவர் பேச வாக்கு வாதம் முற்றியவுடன் கடையின் கேட்டை தாள் போட்டுவிட்டு ஊழியர் வெளியில் செல்கிறார்.

மதுப்பிரியரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கடை ஊழியர் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக பேசுவதுடன் 10 முதல் 15 ரூபாய் வரை கூடுதலாக விற்பது குறித்து மதுப் பிரியர்கள் கேள்வி கேட்டால், எங்கு வேண்டுமானாலும் போய் சொல் என்று தெனாவட்டாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

Views: - 375

0

0