அதிமுகவை பற்றி பேச உரிமை, தகுதி, அருகதை கூட ஓபிஎஸ்க்கு இல்லை : எம்ஜிஆர், ஜெ., ஆன்மா அவரை மன்னிக்காது.. சிவி சண்முகம் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2022, 3:32 pm

கரும்புள்ளியாக உள்ள ஓ. பன்னீர் செல்வம் அதிமுக இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா, எம் ஜி ஆரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என சிவி சண்முகம் எம்பி ஆவேசமாக கூறியுள்ளார்.

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் சிவி சண்முகம் 51 வது அதிமுக தொடக்கவிழாவினை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்த பின் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுகவில் சட்டதிட்டங்களை மாற்றலாமா மாற்றகூடாதா அப்படி மாற்றினால் எம் ஜி ஆரின் ஆன்மா மன்னிக்காது என கூறும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தகுதி தராதரம் இல்லை எனவும் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பதவி ஆசையாலும், வெறியாலும் தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்ற போது அதிமுக இயக்கத்தை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு அருகதை கிடையாது.

சாதாரண அடிப்படை தொண்டனுக்கு உள்ள உரிமை கூட ஓ. பன்னீர் செல்வத்துக்கு இல்லை பராசக்தி பட வசனத்தை மனப்பாடம் செய்து ஸ்டாலின் புகழை புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் ஓ பன்னீர் செல்வம். அவரது மகன் ரவிந்தீரன் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாக உள்ளதாக கூறும் இருவருக்கும் அதிமுக பற்றி கூற தகுதியில்லை என தெரிவித்தார்.

எம்.ஜி. ராமச்சந்திரனால் கொண்டுவரப்பட்ட சட்டவிதியை தன்னுடைய பதவி ஆசை சுயலாபத்திற்காக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து கட்சியிலையே இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கொண்டு வந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.

எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் அதிமுக சின்னத்தை முடக்கியவர்களை மன்னிக்காது இன்றைக்கு கரும்புள்ளியாக உள்ள ஓ. பன்னீர் செல்வம் அதிமுக இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!