பாம்பை கொன்று எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய் ; விஷம் தலைக்கேறியதில் பரிதாபமாக உயிரிழப்பு… குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 4:10 pm
Quick Share

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்லபாம்பை நாய் கடித்து கொன்ற நிலையில், பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

செல்ல பிராணியாக கருதப்படும் நாய் நன்றியுள்ள விலங்கு ஆகும், வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மனிதர்களிடம் கூட காண முடியாத சில நல்ல குணம் நாயிடம் உண்டு. நாயிடம் குறும்பு அதிகம் உண்டு. இதனால், சிலர் நாயை வீட்டில் ஒருவர் போல வளர்த்து வருகின்றனர். நாயிடம் கொஞ்சும் போது தங்களது மன அழுத்தம் குறைவதாகவும், நாய் வளர்க்கும் சிலர் கூறுகின்றனர்.

திரைப்படங்களில் நாய் வீட்டிற்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்குவது, தன்னை வளர்த்த எஜமானர்களையும், வீட்டில் உள்ளவர்களையும் பாம்பு, பூச்சி திருடர்களிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற சம்பவங்கள் இடம் பெற்று இருக்கும். இதே போன்ற சம்பவங்கள் நிஜத்திலும் ஆங்காங்கே நடைபெறுவது உண்டு.

இலுப்பூர் அருகே தன்னை வளர்த்த எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை வளர்ப்பு நாய் கடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தில் பாம்பு கடித்ததில் நாயும் இறந்துள்ளது. இது நாயின் உரிமையாளருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

இலுப்பூர் அருகே உள்ள குறிச்சிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால், இவர் ஓட்டுநராகவும், விவசாய பணியும் செய்து வருகிறார். இவரது வீட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நாய் ஒன்றை வளர்த்து வருகின்றார்.

இந்த நிலையில், வீட்டின் முகப்பு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று வந்து வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. இதனை பார்த்த நாய், பாம்பை வீட்டிற்குள் விடாமல் கடுமையாக சண்டையிட்டுள்ளது. இதில் நாய் கடித்ததில் பாம்பு இறந்தது. அதே நேரத்தில் பாம்பு கடித்ததில் அதன் விஷம் நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி நாயும் இறந்துள்ளது.

சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்தபோது பாம்பும், நாயும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று, வீட்டிற்குள் நுழைய விடாமல் தனது உயிரை பார்த்து கொண்டு குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் உடலுக்கு ஜெயபால் அவருடைய குடும்பத்தினர் பூக்களை தூவி தங்களது கண்ணீர் அஞ்சலியுடன் அடக்கம் செய்தனர்.

Views: - 616

0

0