P.E.T பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்தாதீங்க : ஆசிரியர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த மாணவனின் கோரிக்கை.. அப்லாசில் அதிர்ந்த அரங்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2022, 2:08 pm
PET Period Student - Updatenews360
Quick Share

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது என மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு தலைவர் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநில கல்விக் கொள்கை தொடர்பாக மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் திருச்சி புதுக்கோட்டை பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை உயர் மட்ட குழுவினரிடம் கூறினர்.

இக்கூட்டத்தில் பேசிய அரசு பள்ளி மாணவர் : கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும்.

தயவு செய்து PET பீரியடில் பாடம் நடத்தாதீங்க, அனைத்து பள்ளிகளிலும் பீட்டி பீரியடில் விளையாடுவதற்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதேபோல் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தற்போது தொடக்கப் பள்ளியில் வழங்கும் சிற்றுண்டி திட்டத்தை உயர்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்பாக அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் ஒருவர் கேட்டதற்கு : உயர் மட்டக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் அதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை, அது அவர்களது சொந்த விருப்பம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Views: - 426

0

0