எங்க வம்சமே அதிமுக தான்.. அம்மா ஜெயலலிதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் : ஜிபி முத்துவை கொண்டாடும் ஐடி விங்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 1:30 pm

டிக் டாக் மூலம் பிரபலங்களில் மிக முக்கியமானவர் ஜி பி முத்து. உடன்குடியைச் சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளரான அவர் அது தடை செய்யப்பட்ட பிறகு யூட்யூப் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

மேலும் தனக்கு வரும் கடிதங்களை படித்து காட்டிய வீடியோக்கள் பூடியூப்களில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இன்ஸ்டாகிராமிலும் தனது வீடியோக்களை பதிவிட்ட அவர் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார். இதையடுத்து கடை திறப்பு விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பங்கேற்று பிஸியாக வலம் வர ஆரம்பித்தார்.

மீம் கிரியேட்டர்களும் ஆதரவு கொடுக்க தமிழகம் முழுவதும் பிரபலமானா ஜி.பி.முத்துவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

இதையடுத்து அதிர்ஷ்டமும் அவர் வீட்டுக்கே தேடிப் போனது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜி பி முத்து.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனே ஆதாம் னா யாரு என கமல்ஹாசனையே மலைக்க வைத்தார் ஜிபி முத்து. சிறுது நாட்களில் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வீட்டில் இருந்து வெளியேறினார்.

அது மட்டுமல்ல.. சன்னி லியோனோடு ஜிபி முத்து நடித்த ஓ மை கோஸ்ட் பட நிகழ்ச்சியில் பங்கேற்று.. ரசிகர்களின் ஆதரவுகளை சம்பாதித்தார். தொடர்ந்து ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு நீண்டு கொண்டே போகிறது.

தற்போது அவர் பல சேனல்களில் பங்கேற்று பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த ஜிபி முத்து அரசியல் குறித்த தனது பார்வையை பகிர்ந்து கொண்டார். அதில் தனது தந்தை மற்றும் அவரது தந்தை என அனைவருமே அதிமுகவை சேர்ந்தவர்கள். அந்த வழியில் வந்த எனது தாயும் அதிமுகவை சேர்ந்தவர் தான்.

எனக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். ஒரு இரும்பு பெண்மணியான அவர் எப்போதும் யாருக்கும் பயந்ததில்லை. அதனால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவர் மரணம் அடைந்தபோது ஒரு நாள் முழுவதும் நான் அழுதேன்: எனக்கூறி இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த வீடியோவை அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பலரும் தனித்தனியாக யூட்யூப் மற்றும் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் எங்கள் பரம்பரையே அதிமுக தான் என அண்ணன் ஜிபி முத்து பேசினார் என வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மேலும் எம்ஜிஆர் சிலைக்கு அருகே ஜி. பி முத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிமுகவுக்கு ஜிபி முத்து ஆதரவு அளித்திருக்கிறார் என கூறி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் அந்த வீடியோவில் எனது அப்பா அம்மா அதிமுகவை சேர்ந்தவர்கள். எனக்கு ஜெயலலிதாவை மட்டும் பிடிக்கும் எனக் கூறியிருக்கிறார். மேலும் எனக்கு அரசியல் ஒத்து வராது என மற்றொரு சேனலுக்கும் அவர் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!