தைப்பூச திருவிழாவின் கடைசி நாள்… பழனியில் காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ; இன்று மாலை தெப்பத்தேர் பவனிக்கு ஏற்பாடு

Author: Babu Lakshmanan
7 February 2023, 11:57 am
Quick Share

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் 10வது நாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவின் கடைசி நாளான இன்றுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது.

தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 4ம் தேதி நடந்துமுடிந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று மாலை தெப்பத்தேர் பவனி நடைபெறுகிறது.

தொடர்ந்து இரவு கொடியிறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவைடைகிறது. தைப்பூசத் திருவிழா நிறைவு நாளான இன்று பழனி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காவடிகள் சுமந்து கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Views: - 152

0

0