கழகம் என்றால் சூதாடும் பொருள்… புதிததாக கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் அதற்கான அர்த்தத்தை சொல்லனும் ; நல்லசாமி சவால்…!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 11:21 am
Quick Share

புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய், கழகத்திற்கான அர்த்தத்தை தெரிவிக்க வேண்டும் என்று கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- இடைக்கால பட்ஜெட்டில் புதிதான அறிவிப்பு எதுவும் இல்லை, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எந்த இலவச அறிவிப்பும் இல்லை என்பதால் நடுநிலையோடு போடப்பட்ட பட்ஜெட்டாக பார்க்கிறோம். மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகளை தமிழகத்தில் அனுமதித்ததால் தமிழ்நாடு உலகத்தின் குப்பை தொட்டியாக மாறும். இது போன்ற வெளி நாட்டு திட்டங்களை தவிர்க்க வேண்டும்.

கள் இறக்க மின்சாரம் தேவையில்லை, வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வெளிநாட்டு முதலீடுகளினால் தீமைகள் தான் அதிகரிக்கும். ஆண்டிற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது. ஆனால், மது தயாரிக்க தேவையான மொலாசஸ் கரும்பு விவசாயிகள் தான் வழங்குகிறார்கள். அதைப்பற்றி பேச மறுக்கிறார்கள். மது விலை ஏற்றத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால், பால் விலை ஏற்றினால் எவ்வளவு எதிர்ப்பு விவசாயிகளை புறக்கணிக்கிறார்கள்.

விஜய் கட்சி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். யாரோ எழுதிய வசனத்தை ஒப்பிப்பவர். இடது காலை தூக்கி பலர் உருண்டு போகிறார்கள். வலது காலை தூக்கினால் வந்தவர்கள் எல்லாம் கீழே விழுகிறார்கள். அவர் திறமையை காட்ட வேண்டிய இடம் ஒலிம்பிக் மற்றும் சீனா எல்லை தான். கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கழகம் என்றால் சூதாடும் இடம் என பொருள்.

இந்த பொருள் கூட தெரியாமல், திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறார்கள், பேருந்தில் திருக்குறள் எழுதுகிறார்கள். இது தொடர்பாக கலைஞரிடம் கேட்ட போது மழுப்பலான பதிலை சொல்லி விட்டு சென்று விட்டார். விஜய் அரசியலில் கால் பதித்து இருக்கிறார், அவர் கழகத்திற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். கள் தடை செய்யப்பட வேண்டிய போதை பொருள் தான் என்று எங்களுடன் விவாதித்து, வெற்றி பெற்றால் அவருக்கு கள் இயக்கம், விஜய்க்கு 10 கோடி பரிசு கொடுக்கும். அவர் மக்கள் மனதில் இடம் பெறுவதுடன் வரும் 2026 நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம், முதல்வரும் ஆகலாம், என்றார்.

Views: - 326

0

0