ஒன்னுக்கொன்னு சளைத்ததல்ல… திமுக, அதிமுகவின் அரசியல் விளையாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள் ; பழ.கருப்பையா..!!

Author: Babu Lakshmanan
2 October 2023, 1:24 pm
Quick Share

அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்து வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தன்னுரிமை கழகம் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களை பிடிக்கும் என்று பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு தன்னுரிமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பழ கருப்பையா கூறியதாவது:- தமிழ்நாடு தன்னுரிமை கழக கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நான் இங்கு வந்துள்ளேன். வந்தபின் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசி, இங்கு இன்னும் ஒரு 10 நாட்களில் மாபேரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

இந்த புதிய கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை, உறுப்பினர் சேர்க்கையில் மூலமாக அறிந்து கொண்டோம். அடுத்த சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில், தமிழ்நாடு தன்னுரிமை கழகம் தமிழகத்தில் குறுப்பிட்ட இடங்களை பிடிக்கும். தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உள்ளது. கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில், மாற்றி மாற்றி ஆளுகின்ற இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான ஆட்சியை தான் நடத்துகிறார்கள்.

2003ல் அண்ணா திமுக மீது, கேஎஸ்எஸ்ஆர், பொண்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதன் பின்னர் 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியும் அந்த வழக்குகள் கவனிக்கப்படவில்லை. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை நீக்கி கொள்கிறது, அல்லது வழக்கு நடந்தால் அதில் உள்ள சாட்சிகள் பிறள் சாட்சிகளாக மாறி வழக்கு தள்ளுபடி ஆகின்றது.

அதிமுகவினர் மீதும் வழக்கு இருக்கும், திமுகவினர் மீதும் வழக்கு இருக்கும். ஆனால் யார் மீதும் தீர்ப்பு வராது, யார் யாருக்கும் நெருக்கடிகளை அளிப்பதில்லை, அவரவர்கள் ஆட்சியில் இந்த வழக்கு நீக்கப்படும், எதிரிகளை தண்டிப்பதில்லை. எனவே இந்த அரசியல் விளையாட்டை இனியும் மக்கள் நம்ப தயாராக இல்லை.

இந்த வெற்றிடத்தை தமிழ்நாடு தன்னுரிமை கழகம் நிரப்பும். மக்களிடம் பணம் தந்து வாக்குகளை நாங்கள் வாங்குவதில்லை. அந்த அளவுக்கு பணம் நிறைந்த கட்சியாக நாங்கள் இல்லை. எங்களை நம்பி வருகின்ற 10 உறுப்பினர்களுக்காக நாங்கள் ஆட்சி நடத்த உள்ளோம். மக்களுக்கு தேவையான மருத்துவம், கல்வி, போன்றவற்றை தரமாக வழங்கும் வகையில் ஆட்சி நடத்த இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 336

0

0