குடியரசு தினம் முடிந்தும் பாமக எம்எல்ஏ அலுவலகத்தில் இறக்கப்படாத தேசிய கொடி… வேதனை தெரிவிக்கும் தேசப்பற்றாளர்கள்…!!

Author: kavin kumar
1 February 2022, 3:52 pm
Quick Share

தருமபுரி : பென்னாகரம் பாமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தினத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி 6 நாட்களாகியும் இறக்கப்படாததால் தேசப்பற்றாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், 33 கிராம ஊராட்சி, இரண்டு பேரூராட்சிகளை உள்ளடக்கியது. பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் சார்பதிவாளர் அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ளது. கடந்த 26ஆம் தேதி புதன்கிழமை நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

குடியரசு தினம் முடிவுற்று 6 நாட்களாகியும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி இரவு பகலாக பறந்த நிலையில் உள்ளது. தற்போது வரை இறக்கப்படாமல் கொடிக்கம்பத்தில் உள்ளது. குடியரசு தின விழாவில் அரசு அலுவலகங்களில் காலை 7 மணிக்கு கொடிகள் ஏற்றப்பட்டு மாலை 5 மணிக்குள் கொடி இறக்கப்பட வேண்டும் என்பது மரபு இருப்பின் சட்டமன்ற அலுவலகத்தில் இன்றுவரை தேசியக்கொடி இறக்கப்படாதது வேதனை அளிப்பதாக தேசியப் பற்றாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 2093

    0

    0