உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்கு 19% இட ஒதுக்கீடு வேண்டும்: கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

Author: Rajesh
27 January 2022, 2:41 pm

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டி அரசியல் அதிகாரத்தில் சமூக நீதிக்கான கூட்டியக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அந்த மனுவில் கூறி இருப்பதாவது, கோவை மாநகரில் 100 வார்டுகள் உள்ளன. இதில் 10 சதவீதம் மட்டுமே பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு எந்த வார்டும் ஒதுக்கப்படவில்லை. இது உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதாக இல்லை. இடஒதுக்கீடும் முறையாக சரியாக பின்பற்றப்படுவது இல்லை.

இது பட்டியலின பழங்குடி இன மக்களின் அரசியல் உரிமையையும் வாழ்வுரிமையையும் பறிக்கும் விதமாக அமைந்துள்ளது. எனவே நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகரில் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?