சாலையில் சென்றவர்களுக்கு கத்தி குத்து…!! கஞ்சா போதையில் வாலிபர்கள் வெறிச்செயல்…!

Author: kavin kumar
27 January 2022, 2:36 pm
Quick Share

திருவள்ளூர் : திருத்தணி அருகே கஞ்சா போதையில் மூன்று பேரை வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே நல்லாட்டூர் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆறுமுகம்(55), தேசன் (62), இவரது மகன் பாக்கியம் (53) ஆகிய மூவரும் நேற்று இரவு இவர்கள் ஊரில் கடைத்தெருவிற்கு பொருட்கள் வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாலிபர்களை அவர்களை ஓரமாய் போக சொல்லியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் வாகனங்களை வைத்திருந்த தமிழ்ச்செல்வன் (23), அகிலன் (21), அஜய் (23), தமிழழகன் (21), தினகரன் (17) ஆகியோர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும்,

இவர்கள் 5 பேரும் இணைந்து ஆறுமுகம், பாக்கியம், தேசன் ஆகியோரை கடுமையாகத் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், பாக்கியம், தேசன் ஆகிய மூவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசில் பாக்கியம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 380

0

0