‘ஜெய் ஜக்கம்மா… நல்ல காலம் பிறக்குப்போகுது’… கோடை வெயில் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்..!!!

Author: Babu Lakshmanan
8 May 2024, 9:59 am
Quick Share

தமிழகத்தில் கோடை வெயில் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட தகவலால் மக்கள் குஷியடைந்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுவதன் காரணமாக, இன்று முதல் 11 ஆம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

கடந்த சில தினங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் வாட்டிய நிலையில், சென்னையில் நேற்று பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இது அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க: வலசை பாதை அடைக்கப்பட்டதால் தடுமாறிய பாகுபலி… சாலையில் நின்று தவித்த காட்டு யானை… கண்கலங்க வைத்த காட்சிகள்!!

இதனிடையே, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், தன் சமூகவலைதளபக்கத்தில், “ஜெய் ஜக்கம்மா… நல்ல காலம் பிறக்குப்போகுது” என பதிவிட்டு குறிசொல்வது போல “வெயில் குறையப்போகுது, தமிழ்நாட்டில் நல்ல மழை வரப்போகுது” என கணித்து கூறியுள்ளார். இதையடுத்து தமிழக மக்கள் குளுகுளு கோடையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Views: - 135

0

0

Leave a Reply