தேசிய வாக்காளர் தினம்: கோவையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு…!!

Author: Rajesh
25 January 2022, 12:33 pm
Quick Share

கோவை: மாவட்ட ஆட்சிய‌ர் அலுவ‌ல‌க‌த்தில் ஆட்சியர் ஜி.எஸ்.ச‌மீர‌ன் முன்னிலையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காள‌ர்க‌ளின் உறுதிமொழி ஏற்க‌ப்ப‌ட்ட‌து.

கோவையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதில் இந்திய‌ குடிம‌க்களாகிய‌ நாங்க‌ள், ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது உறுதியான‌ ந‌ம்பிக்கை கொண்டு, ந‌ம் நாட்டின் ஜ‌ன‌நாய‌க‌ ம‌ர‌புக‌ளையும், சுத‌ந்திர‌மான‌, நியாய‌மான‌ ம‌ற்றும் அமைதியான‌ தேர்த‌ல்க‌ளின் கண்ணிய‌த்தையும் நிலைநிறுத்துவோம் என்றும்,

ஒவ்வொரு தேர்த‌லிலும் , எவ்வித‌ அச்ச‌மின்றி ம‌த‌ம், இன‌ம், சாதி, ச‌மூக‌த்தாக்க‌மின்றியும் அல்ல‌து வேறு ஏதேனும் தூண்டுத‌ல்க‌ளின்றியும் வாக்காளிப்போம் என்றும் உறுமொழி ஏற்க‌ப்ப‌ட்ட‌து.

இதில் ப‌ள்ளி மாணவ‌ மாண‌விய‌ர்க‌ள், முத‌ல் த‌லைமுறை வாக்காளர்க‌ள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ் ச‌மீர‌ன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்க‌ப்ப‌ட்ட‌து.

பின்ன‌ர் , கோவை அர‌சு ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விய‌ர்க‌ளுக்கு பேச்சுப் போட்டி, க‌ட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு சான்றித‌ழ் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

Views: - 1473

0

0