பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு உறுதி ; ராமதாஸ் பேச்சு…!!

Author: Babu Lakshmanan
4 April 2024, 12:55 pm
Quick Share

பெண் உரிமை பாதுகாப்புக்காக சௌமியா அன்புமணி உறுதுணையாக இருப்பார் என்று தர்மபுரி பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பாக போட்டியிடும் சௌமியா அன்புமணியை ஆதரித்து தர்மபுரியில் வள்ளலார் கடலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சௌமியா அன்புமணிக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

மேலும் படிக்க: ‘இப்படி எல்லாமா ஓட்டு கேட்பாங்க’… வாக்காளர்களுக்கு முடி திருத்தம் செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர்… வியந்து பார்த்த பொதுமக்கள்…!!!

அப்போது, அவர் பேசியதாவது :- தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு நன்றாகவே தெரியும். அந்த பிரச்சனைகளை தீர்க்க அவர் தொடர்ந்து போராடி வருகிறார். அவரை தொடர்ந்து, இந்த மாவட்ட மக்கள் பிரச்சனைகள் மற்றும் உரிமைகளுக்காக சௌமியா அன்புமணி தொடர்ந்து போராடுவார். அவரை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தை விட தர்மபுரி மாவட்டம் அதிகம் வளர்ந்து இருக்க வேண்டும். ஆனால் வளரவில்லை. இங்குள்ள மக்கள் பெங்களூரு மற்றும் கோவை திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். பொங்கல் தீபாவளிக்கு வருவார்கள். வறுமையில் வாழ்ந்த இந்த பகுதி, மக்கள் இன்று எங்கு பார்த்தாலும் சிறிய அழகிய வீடுகளில் வசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் படிக்க: எங்க சாமி அண்ணாமலை.. அவரை முழுசா நம்புறேன் ; நெஞ்சை உருக்கும் ஏழைத் தாயின் வீடியோ..!

இந்த மாவட்டத்து மக்கள் பெரிய தவறு தொடர்ந்து செய்தார்கள். பெண் குழந்தை பிறந்தால் குப்பையில் போடுவார்கள். அதன் பின்பு தான் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். இப்போது அந்த தவறு நடப்பதில்லை. பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு சௌமியா அன்புமணி உறுதுணையாக இருப்பார். பெண் உரிமை பாதுகாப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை வரை பேசியவர்.

இவரை தர்மபுரி மாவட்ட மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில் 32 மாவட்டமாக இருந்ததை 38 மாவட்டங்களாக உருவாக்கியவர்கள் ராமதாஸ். பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி புதிதாக ஆறு மாவட்டங்களை உருவாக்கி வைத்துள்ளோம். இந்த மாவட்டத்தில் பிடிக்காத ஒன்று, 18 வயதிற்கு உள்ளாகவே திருமணம் நடக்கிறது. ஆனால் அது இப்போதுதான் நடக்காது.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம். பெண்களுக்கு சம உரிமை அந்தஸ்து வழங்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வருவதற்கு ராமதாஸ் தான் காரணம். அந்தத் திட்டம் நிறைவேற்றுவதற்கு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாம் நீண்ட காலமாக போராடுகிறோம். இந்த உள் இட ஒதுக்கீட்டை நிச்சயம் பெற்று தருவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் என்று சொன்னார்கள். சௌமியா அன்புமணி இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருடன் சேர்ந்து 401 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெறும். நேரு, இந்திரா காந்தியை தொடர்ந்து மோடியும் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார், எனக் கூறினார்.

இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜிகே மணி, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 116

0

0