ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

Author: kavin kumar
20 February 2022, 10:08 pm

புதுச்சேரி புதுச்சேரியில் 25 லடசம் ரூபாய் மதிப்பிளான 14 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் சமீப காலமாக விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்ததை அடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை கனகசெட்டிகுளம் பகுதியில் காலாப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் தமிழக பகுதியை சேர்ந்த விக்னேஷ்(20) , தீனா(22) மற்றும் பரத்(20) என்பதும், இவர்கள் புதுச்சேரியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிச்சென்று அதனை தமிழக பகுதிகளில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 14 விலை உயர்ந்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?