2026ல் கண்டிப்பாக எங்களுடைய ஆட்சிதான்… புதுச்சேரி அதிமுக நிர்வாகி அன்பழகன் நம்பிக்கை…!

Author: Babu Lakshmanan
29 April 2022, 1:20 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் அடுத்து வரும் 2026ல் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில அதிமுகவின் உட்கட்சி தேர்தல் கடந்த 23, 24 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அதிமுக தலைமை நேற்று வெளியிட்டது.

அதன்படி கிழக்கு மாநில செயலாளராக அன்பழகனும், அவைத்தலைவராக அன்பானந்தமும், இணைச்செயலாளராக வீரம்மாளும், துணைச்செயலளராக கோவிந்தம்மாள் மற்றும் வையாபுரிமணிகண்டனும், பொருளாளராக ரவி பாண்டுரங்கனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், கழக கொடியை ஏற்றியும், எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ததற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கினைப்பாளருக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், வரும் 2026ல் புதுச்சேரியில் மீண்டும் அதிமுக தலைமையில் ஆட்சி அமைய சிறப்பாக செயல்பாடுவோம் என தெரிவித்தார்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!