பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீத்தூள்… கலப்படமான சலவை பவுடரை சப்ளை செய்த நபர் கைது…!!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 2:19 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் சப்ளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் மற்றும் பெருங்காயத்தூள் விற்பனை செய்யப்படுவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி டீத்தூள் மற்றும் சலவை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து பெரியகடை காவல்நிலைய போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன் (38) என்ற வாலிபர் போலி டீத்தூள், சலவை பவுடர், பெருங்காயத்தூள் உள்ளிட்ட பொருட்களை புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள போலி டீத்தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?