பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு… மதுரை மல்லி கிலோ ரூ.3000க்கு விற்பனை..!!

Author: Babu Lakshmanan
13 January 2024, 10:41 am
Quick Share

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் நேற்று வரை 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டு பூக்கள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்களும் கிலோ 2000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி – 2ஆயிரம், சம்மங்கி , செவ்வந்தி -250, செண்டுமல்லி -100, அரளி -450, பன்னீர் ரோஸ் -300, பட்டன் ரோஸ் – 250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மல்லிகைப்பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிலோ 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. முல்லை மற்றும் பிச்சி பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 178

0

0