வகுப்பில் என்னா ஆட்டம்… பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியரின் வைரல் வீடியோ … மற்றொரு புறம் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
8 April 2022, 1:29 pm

பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வரை பணிமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவியிடம், அதே துறையில் கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த மகேந்திரன் தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, மாணவியை தனது வீட்டிற்கு வருமாறும், நட்பை வளர்க்கலாம் என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பொன்னேரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர் மீது பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்ததாகவும், பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது, ஆபாச வார்த்தைகளை பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கல்லூரி முன்பாக பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவிப் பேராசிரியர் மகேந்திரனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதுபோன்று சம்பவங்கள் கல்லூரியில் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும், கல்லூரி முதல்வர் சேகர் பணியிலிருந்துமாற்றம் வேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், SFI மாணவர் சங்கத்தினர் கல்லூரிக்குச் சென்று‌ செய்முறை தேர்வு எழுதி வரும் மாணவர்களை தேர்வு எழுதாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

https://vimeo.com/697282777

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் கல்லூரியில் வகுப்பு எடுக்கும்போது, நடனமாடி வகுப்பு எடுப்பது போன்ற வீடியோக்கள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

https://vimeo.com/697282924

மாணவர்கள் போர்வையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால், தேதி குறிப்பிடப்படாமல் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு விடப்பட்டுள்ளது. கல்லூரி திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு ஒட்டப்பட்டது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?