பாரதி கண்ணம்மா சீரியலில் என்ட்ரியாகும் பிரபல நடிகை: இவங்களாவது DNA டெஸ்ட் எடுக்க வெச்சு கதைய முடிப்பாங்களா?…ஆவலில் ரசிகர்கள்..!!

Author: Rajesh
8 April 2022, 1:17 pm
Quick Share

மக்களிடையே பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில் பிக்பாஸ் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் முதலிடம் பிடித்து வரும் தொடர் தான் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த தொடர் மலையாள சீரியலின் ரீமேக் என்பது உலகறிந்த விஷயம் என்றாலும், இதில் சில பட்டி டிங்கரிங் வேலைகளை செய்துள்ளார் பிரவீன்.

ஆரம்பத்தில் சண்டை, காதல், ரொமான்டிக் சீன் என சென்று கொண்டிருந்த சீரியலில் திடீர் திருப்பமாக வந்தது தான் கண்ணம்மாவின் கர்ப்பம். ஒரே ஒரு DNA டெஸ்ட் ட்விஸ்ட்டை வைத்துக்கொண்டு பல ஆண்டுகளாக இழுத்து கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா. ஒரு வேளை DNA டெஸ்ட் எடுக்க பாரதி ஒத்துக்கொண்டால் மொத்த ஜோலியும் முடிந்துவிடும்.

ஆனால், இந்த இயக்குநர் ஏன் இதை செய்யாமல் இருக்கிறார் என பாரதி கண்ணம்மாவின் ரசிகைகள் பிரவீனை கறித்து கொட்டி வருகின்றனர். இந்நிலையில், தான் கதையில் ஒரு புது கேரக்டரை களம் இறக்க உள்ளார்கள். இப்போது கதையில் குழந்தைகள் ஹேமா மற்றம் லஷ்மி அப்பா பாரதியையும், அம்மா கண்ணம்மாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், கதைக்கு மேலும் விறுவிறுப்பு சேர்க்க பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிரபல நடிகை ஒருவரை உள்ளே இறக்கியுள்ளார் பிரவீன். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ரேகா தான். இந்த தகவல் சோசியல் மீடியாவில் கசிந்த நிலையில், இவரது பாரதியை DNA டெஸ்ட் எடுக்க வைத்து கதைக்கு ஹேப்பி எண்டிங் தருவாறா என ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். பொறுத்திருந்து பார்க்கலாம்….பாரதி கண்ணம்மாவை…!!

Views: - 787

0

0