விவசாயத்தை அடியோடு அழிக்கும் நோக்கத்தில் CM ஸ்டாலின் ; தமிழக அரசின் செயல் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் ; பிஆர் பாண்டியன்..!!

Author: Babu Lakshmanan
10 November 2023, 2:12 pm
Quick Share

தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தண்ணீரை விடுவிக்க மறுப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், விவசாயத்தை அடியோடு அழிக்கும் உள்நோக்கத்தோடு தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது :- காவிரி டெல்டாவில் ககுறுவையை சாகுபடி செய்து மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், தற்பொழுது தமிழ்நாடு அரசினுடைய வேண்டுகோளை ஏற்று கடந்த இரண்டு தினங்களாக பெய்து வருகிற வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி கிட்டத்தட்ட 18 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு நடவு பணிகளை சம்பா , தாளடி சாகுபடி பணிகளை துவக்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் டிசம்பர், ஜனவரி மாதம் முழுமையிலும் முழுமையாக பாசனத்திற்கு தண்ணீர் தேவை உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு தற்போதைய நிலையில் காவிரி நீரை பாசனத்திற்கு இரண்டு மாதங்கள் விடுவிப்பதற்கு ஜனவரி இறுதிவரை விடுவிப்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். வைகையில் திருமங்கலம் கால்வாய், மேலூர் கால்வாய் பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

காவிரி, முல்லைப் பெரியாறு, வைகை உள்ளிட்ட அனைத்து அணைகளில் உள்ள தண்ணீரை குடி தண்ணீர் தேவைக்கு வேண்டும் கூறி, தமிழ்நாடு அரசு தண்ணீரை விடுவிக்க மறுப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. விவசாயத்தை அடியோடு அழிக்கும் உள்நோக்கத்தோடு, இந்த செயல்பாடு என்பது விவசாயிகளுக்கு ஏற்கத்தக்கது அல்ல. எனவே சாகுபடி குறித்து தமிழ்நாடு அரசு அணைகளில் இருக்கின்ற தண்ணீரை முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

குடிநீர் என்கிற பெயரால் விவசாயத்தை ஒட்டுமொத்தமாக அளிப்பதற்கு துணை போகக்கூடாது. இதனால், மிகப்பெரிய உணவு உற்பத்தி பாதிக்கப் போகிறது. இந்த ஆண்டு அரிசி மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட போகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான வெளிப்படையான கருத்துகளை தெரிவிக்க முன்வர வேண்டும், என்றார்.

Views: - 188

0

0