‘நீ எனக்கு எதுவுமே செய்யல’… கோவிலில் பெட்ரோல் குண்டுவீசிய நபர் ; சென்னையில் பரபரப்பு…!!
Author: Babu Lakshmanan10 November 2023, 12:43 pm
சென்னையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – பாரிமுனையில் வீரபத்ரசுவாமி தேவஸ்தான கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வழக்கம் போல இன்று காலை பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த ஒருவர், ‘நீ எனக்கு எதுவுமே செய்யவில்லை என்று சாமி சிலையை பார்த்து கூறியபடி, மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோவில் மீது தூக்கி எறிந்தார். இதனால், அப்பகுதி தீப்பற்றி எரிந்தது.
இதைப் பார்த்து அதிர்ந்து போன அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் தீயை உடனடியாக அணைத்தனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவிலின் எதிரே உலர் பழங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருவதும், மதுபோதையில் இருந்த அவர், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
0
0