தென் தமிழகத்தில் திட்டமிட்டு சாதிய வன்கொடுமை… மீண்டும் 1995ம் ஆண்டை கொண்டு வர வேண்டாம் ; எச்சரிக்கும் கிருஷ்ணசாமி..!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 4:50 pm
Quick Share

தென் தமிழகத்தில் திட்டமிட்டு ஜாதிய வன்கொடுமை நடந்து வருகிறது என்றும், மீண்டும் 1995,1996 ஆம் ஆண்டை கொண்டு வந்து விடாதீர்கள் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறும்போது :- தமிழக அரசால் நடத்தப்பட கூடிய மதுபான கடைகளால் நாளுக்கு நாள் மதுக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர் முதல் அனைவருமே இதற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் பலர் உடல் நல குறைவிற்கு ஆளாகி வருகின்றனர்.

குடும்பத்தில் வறுமை, சாலை விபத்து, ஜாதி சண்டை, மத சண்டை அதிகரித்து வருகிறது. ஆகவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. டிச., 15 அன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாநாடு நடத்த உள்ளோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது. பல தலைவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தென் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக சாதிய மோதல் நடந்து வருகிறது. எங்கள் கட்சியின் சார்பில் இடைப்பட்ட காலத்தில் சமூக நல்லிணக்கம் உருவாக்கப்பட்டு இருந்தது. சமூகத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக தற்போது சாதிய மோதல் அரங்கேறி வருகின்றன. நாங்குநேரி, கழுகுமலை, கீழநத்தம், மணி மூர்திஸ்வரம் என ஜாதிய வன்கொடுமை தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. நாகரீகமான மனிதர்கள் இது போல செய்ய மாட்டார்கள்.

இந்த சம்பவங்களை அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும். நெல்லை, தூத்துக்குடி, குமரி என தென் மாவட்டங்களில் ஜாதிய குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்கள் யாரால் நடந்து வருகிறது என காவல்துறைக்கு தெரிந்தும், கையாலாகாமல் காவல்துறை செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு வாயலவில் மட்டும் சமூகநீதியை குறித்து பேசினால் போதாது. குற்றவாளிகளிடம் கனிவான போக்கை கடைபிடிக்க கூடாது. தமிழகத்தில் மதுரை, தென்காசி, தேனி, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஜாதிய ரீதியிலான பிரச்சனை நடந்து வருகிறது. வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களின் சமுதாயத்தில் படித்தவர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

நவம்பர் 18 நெல்லையில் ஜாதிய தாக்குதலை கண்டித்து பேரணி நடைபெற உள்ளது. நெல்லையில் மனிமூர்திஸ்வரம் சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தி உள்ளது. ஜாதிய பிரச்சனைகளை தடுக்க தவறும் அனைவரும் குற்றவாளிகள். 1995,1996 ஆண்டை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வந்து விடாதீர்கள்.
தென் தமிழகத்தில் திட்டமிட்டு சாதிய வன்கொடுமைகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Views: - 173

0

0