சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா..?

Author: Rajesh
30 May 2022, 12:10 pm

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டான் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். சிவகார்த்திகேயன், ரஜினியின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. “இயக்குனர் சிபி, நான் படத்தில் இருக்கும் அனைவரும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். எங்கள் டான் படத்தில் கூட பத்து இடங்களுக்கு மேல் அவரின் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

டான் படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியதாகவும், கடைசி 30 நிமிடம் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை என்றார் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

“இந்திய சினிமாவின் டான் உடன். சூப்பர் ஸ்டாரை சந்தித்தேன். ரஜினிகாந்த் சாரின் ஆசிகளைப் பெற்றேன். இந்த 60 நிமிடங்கள் வாழ்நாள் நினைவாக இருக்கும்.. உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி தலைவா மற்றும் டான் படத்திற்கு உங்கள் மதிப்புமிக்க பாராட்டுக்ககளை வழங்கியதற்கு நன்றி” என்றும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் சந்தித்துள்ள இந்தப் புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!