இந்துக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்திற்குள் நுழைந்து மத பிரச்சாரம் : பெண் உட்பட இருவரை விரட்டியடித்த கிராம மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 4:32 pm

தூத்துக்குடி அருகே இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து மத பிரச்சாரத்திற்கான துண்டு பிரச்சாரம் விநியோகம் செய்த கிறிஸ்த்துவர்கள் இரண்டு பேரை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் விரட்டியடித்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள சிவத்தையாபுரம் பகுதியில் இந்துக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் கிறிஸ்த்துவ அமைப்பை சேர்ந்த ஒரு ஆணும்,பெண்ணும் கையில் துண்டு பிரச்சுரங்கள் வைத்து கொண்டு மதபிரச்சாரம் செய்வதற்காக அங்குள்ள மக்களிடம் வினியோகம் செய்துள்ளனர்.

இதனை கண்ட செபத்தையாபுரம் கிராம பொதுமக்கள் அவர்கள் இருவரையும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊரைவிட்டு துரத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி மேலத்தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜ் மகன் ஆசீர்வாதம் ஞானதுரை (வயது 33). இவர் மங்களகிரியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று செபத்தையாபுரம் பகுதியில் பைபிள் வாசகங்கள் அடங்கிய புத்தகங்களை வீடு வீடாக கொடுத்துக் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை தாக்கி உள்ளனர்.

இதில் காயம் அடைந்த ஆசிரியர் ஆசீர்வாதம்  ஞானதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் அவர் சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த சுகிர்தராஜ் மகன் ஹரிஹரசுதன் (வயது 32),  சிவமுருகன் மகன் ஜெய்சீலன் (வயது 52), கோபால் மகன் மாதவன் (வயது 54) BJP மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆன இவர் உட்பட 3-பேர் மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!