ரூ.1.21 கோடி மதிப்பிலான மருத்துவ உதவித் தொகை : பயனாளிகளுக்கு வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!!

Author: Babu Lakshmanan
17 September 2022, 9:28 pm
Quick Share

கோவை : ஒரு கோடியே 21 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவி தொகையை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி வழங்கினார்.

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் 1954 முதல் 1987ஆம் ஆண்டு வரை டர்னர் அண்ட் நிவால் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ நிதி உதவி வழங்கும் விழா கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது.

ரூ.1.21 கோடி மதிப்பிலான மருத்துவ உதவித் தொகை : பயனாளிகளுக்கு வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!!

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி, 64 பேருக்கு ஒரு கோடியே 21 லட்சம் மதிப்பிலான மருத்துவ நிதி உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

ரூ.1.21 கோடி மதிப்பிலான மருத்துவ உதவித் தொகை : பயனாளிகளுக்கு வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!!

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் மற்றும் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மற்றும் மதுக்கரை ஒன்றிய கழகச் செயலாளர் சண்முகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரூ.1.21 கோடி மதிப்பிலான மருத்துவ உதவித் தொகை : பயனாளிகளுக்கு வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!!

மேலும், விழாவுக்கான ஏற்பாடுகளை மதுக்கரை கே. காளிமுத்து, மெரினாஹாட், மயில்வாகனன், கணேசன், நடராஜ், சசிதரன், ஜாகிர்உசேன் மற்றும் ரீட்டா ஆகியோர் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Views: - 337

0

0