ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு சம்பவம்… இருவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!!

Author: Babu Lakshmanan
16 March 2023, 1:33 pm

சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இதனிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இவர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது.

இது தொடர்பாக காதர்உசேன், சையது அலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி- எஸ்ஐடி பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சையத்அலி மற்றும் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த காதர் உசேன் ஆகிய இருவர் வீட்டிலும் சிபிசிஐடி காவல்துறையினர் 4 மணி நேரத்திற்கு மேலாக அதிரடி சோதனை நடத்தினர்.

கோவை சிபிசிஐடி காவல் ஆய்வாளர்கள் செல்வமீனாட்சி, ராஜேஸ்வரி தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? இவர்கள் வேறு ஏதாவது செய்வதற்கு திட்டமிட்டார்களா? என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?