இனி பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரி தேர்வு, ஒரே மாதிரி கட்டணம் : அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2023, 4:26 pm

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அங்குள்ள மாணவர்கள் வகுப்பறை சென்று ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு என்ன குறை என கேட்டறிந்தார். அப்பொழுது சாலை வசதியும் குறித்த நேரத்திற்கு வர பேருந்து வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க மாணவர்கள் அமைச்சர் பொன்முடி இடம் வலியுறுத்தினர்.

பின்னர் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று உன்னுடைய நடவடிக்கை
எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள பேராசிரியர்களும் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதாக கேட்டிருந்த பொழுது ஊருக்கு அப்பால் இருப்பதால் மாணவர்கள் சேர்க்கை சற்று குறைவாக காணப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்

பின்னர் இதுகுறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளிடம் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில், உள்ள 13 பல்கலைக்கழகங்களில் வரவிருக்கின்ற கல்வியாண்டில் அனைத்து வகையான கல்லூரிகளிலும் ஒரே வகையான கட்டணங்கள் நிர்ணயிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரி தேர்வு முறை, ஒரே மாதிரி கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பேசி உள்ளேன் விரைவில் அதை செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்டஆட்சியர் டாக்டர் சி.பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?