ரூட்டு தல யாரு…? நடுரோட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல் ; ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
14 December 2023, 9:17 am
Quick Share

திண்டிவனத்தில் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் மக்கள் நடமாட்டம் உள்ள பிரபல வீதியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் இயங்கி தனியார் பள்ளி மாணவர்களுக்கும், கோனேரிக்குப்பத்தில் இயங்கி வரக்கூடிய தனியார் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பள்ளி வகுப்பினை முடித்துவிட்டு வந்த மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் திண்டிவனம் ராஜாஜி சாலையிலுள்ள பிரபலமான பாத்திரக்கடை முன் தடியை கையில் கொண்டு வந்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர்.

இதில் கல்லூரி மாணவரின் மண்டை உடையவே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சக மாணவர்கள் சேர்த்துள்ளனர். பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Views: - 550

0

0