கண் திறந்த அம்மன் சிலையால் பரபரப்பு : நள்ளிரவில் பூஜை செய்து வழிபட்ட மக்கள்.. (வீடியோ)!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 1:24 pm

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 1வது தெருவில் ரயில்வே கேட் ஸ்ரீ காக்காச்சி அம்மன், சுடலைமாடசாமி, பேச்சியம்மாள், கருப்பசாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டுகான திருவிழா வரும் 31ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் 7ந்தேதி திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்த போது கோவிலில் ஸ்ரீ காக்காச்சி அம்மன் சிலையில் அம்மன் ஒரு கண் திறந்து பார்த்த நிலையில் இருந்துள்ளது.

இதனை கண்ட மக்கள் வழிபாடு செய்ததது மட்டுமின்றி, கோவில் பூசாரிக்கு தகவல் கொடுத்தனர். பூசாரி விரைந்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தார்.

https://vimeo.com/812710459

இந்த தகவல் பரவியது தொடர்ந்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கி தரிசனம் செய்து செல்கின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!