பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை: அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் தர்ணா…ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு!!

Author: Rajesh
18 February 2022, 11:40 am
Quick Share

கோவை : ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆட்சியருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் திமுக தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருவதாக கூறி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் போராட்டம் நடத்தி வரும் சூழலில், ஆட்சியருடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாததால் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக அரஜகமாக செயல்பட்டு வருவதாகவும், துணை ராணுவ பாதுகாப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். வெளியூரில் இருந்து கோவை வந்து தங்கியுள்ள குண்டர்களை திரும்ப அனுப்பாமல் கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 360

0

0