வார முதல்நாளில் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள்… சென்செக்ஸ் சரிவு : முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2023, 11:14 am
share - updatenews360
Quick Share

வார முதல்நாளில் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள்… சென்செக்ஸ் சரிவு : முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன்படி, சென்செக்ஸ் 200 புள்ளிகள் முதல் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது நடைபெற்றது. இருந்தும் இந்த வாரத்திலாவது பங்குச்சந்தை ஏற்றமடையும் என்று முதலீட்டாளர்கள் நினைத்திருந்தனர்.

அதன்படி, பங்குச்சந்தை 2 முதல் 5 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அந்தவகையில், இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று 65,419 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 165.92 புள்ளிகள் சரிந்து 65,231.70 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 69.35 புள்ளிகள் உயர்ந்து 19,473.30 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இவ்வாறு பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.

Bajaj Finance, Dr Reddys Labs, Icici Bank, Nestle, M&M போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Adani Enterpris, Adani Ports, Tata Steel, Tata Motors, Grasim போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 2.00 புள்ளிகள் சரிந்து 78.00 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 2.50 புள்ளிகள் சரிந்து 47.64 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.05 புள்ளிகள் சரிந்து 19.45 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 11.93 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

Views: - 284

0

0