சினிமா காட்சிகளில் முடித்திருத்தும் தொழிலாளர்களை இழிவுப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் : தீர்மானம் நிறைவேற்றி எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 9:48 pm
Warn - Updatenews360
Quick Share

திரைப்படங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 5 ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், மருத்துவர், வண்ணார், குயவர், குலாலர் சமுதயத்திற்கு 5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேலும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும், முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்களை பயன்படுத்தக்கூடாது எனவும், அதனை மீறி செய்தால் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு அறிவிக்கும் செவிலியர் பணியிடங்களில் மருத்துவ சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், மூலிகைப்பண்ணை அமைப்பதற்கு அரசு மானிய கடன் உதவி அளிக்க வேண்டும், முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்டோர்க்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும்,

பாரம்பரிய மரபு வழி சித்தவைத்தியத்தியத்திற்கு மருத்துவ சமூக மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிகேகைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளனர்.

Views: - 525

0

0