அவசர அவசரமாக கோவைக்கு புறப்படுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… வெளியான பரபரப்பு காரணம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 9:41 pm

கோவைக்கு புறப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… வெளியான பரபரப்பு காரணம்?!!

ஜெயிலர் திரைப்படம் புது வசூல் சாதனையைப் படைத்தது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் கொண்டாடியது. ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருந்த் ஆகியோருக்கு தயாரிப்பாளர் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும், படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டும் வகையில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நாளைய தினம் நடிகர் ரஜினிகாந்த் கோவை செலவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் காலை கோவை செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்தின் பேரனுக்கு காது குத்தி மொட்டை அடிக்கும் விழா, கோவை மாவட்டம் சூலுரில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளச் செல்கிறார் ரஜினி கோவை செல்கிறார். ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்குக் கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்குத்தான் காது குத்தி மொட்டை அடிக்கும் விழா நடைபெறுகிறது. கோவை மாவட்டம் சூலூரில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள இரு வீட்டாரின் குடும்பத்தினரும் இன்று கோவைக்குச் சென்றுவிட்டனர். இந்தச் சூழலில் நாளை காலை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் கோவை செல்கிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!