ஒரே மாவட்டத்தில் 34 பேருக்கு டெங்கு… அச்சத்தில் மக்கள் ; வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 9:23 pm
Dengue - Updatenews360
Quick Share

ஒரே மாவட்டத்தில் 34 பேருக்கு டெங்கு… அச்சத்தில் மக்கள் ; வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல, டெங்கு தடுப்பு பணிகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் , கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இன்று வரை 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதே போல் நிபா வைரஸ், கேரளம் மாநிலம் கோழிக்கோட்டில் பரவி வருவதால், அதற்காகவும் தமிழக- கேரளம் எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 502

0

0