பீர் பாட்டிலால் சப்ளையரின் மண்டை உடைப்பு… ஓசியில் சரக்கு கேட்டு பாரில் ரவுடிகள் ரகளை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
21 March 2024, 2:19 pm

திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து இரு வேறு பார்களில் மாமூல் கேட்டு பார் ஊழியர்களை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்ற ரவுடிகளின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் உள்ள பாரில் அடையாளம் தெரியாத ஐந்து மர்ம நபர்கள் வந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, அவர்கள் பின்னர் இலவசமாக மது கேட்டும் மாதம் மாமுல் தர வேண்டும் என கேட்டதாகவும், இதற்கு பாரில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவர் பணம் தர மறுத்ததால், அவரை பீர் பாட்டிலால் அடித்துள்ளனர்.

பின்னர் அரிவாளால் வெட்டி விட்டு, பாரில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து, அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இது குறித்து பார் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று, மீஞ்சூர் அடுத்த கொக்கு மேடு பகுதியில் பாரில் மாமூல் கேட்டு தகராறு ஈடுபட்டு பாரில் பணிபுரிந்த ஜெயின் என்பவரை வெட்டியும் பாரிலிருந்து 20 பாட்டில்களையும், ₹10,000 கொள்ளையடித்தவர்கள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், இது குறித்து மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, மாமூல் கேட்டு ரவுடிகள் ஈடுபடும் சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!