மதுப்பிரியர்களை கவர டாஸ்மாக் நிறுவனம் புதிய யுக்தி : தீபாவளியை முன்னிட்டு அதிரடி விருந்து…!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2023, 4:36 pm

மதுப்பிரியர்களை கவர டாஸ்மாக் நிறுவனம் புதிய யுக்தி : தீபாவளியை முன்னிட்டு அதிரடி விருந்து…!!!

டாஸ்மாக்கில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, போன்ற விடுமுறை காலங்களில் வழக்கத்தில் இல்லாத அளவிற்கு மதுவிற்பனை இருக்கும். பொதுவாக 100 கோடிக்கு ஒரு நாள் விற்பனையாகும் என்றால் தீபாவளி சமயத்தில் 200 முதல் 300 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையாகும் என்கிறார்கள்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அப்போது பலரும் மது அருந்துவார்கள் என்பதால் போதிய மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிமகன்கள் விரும்பும் மதுபானங்கள் அதிகப்படியாக இருப்பு வைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

‘தண்டர்போல்ட் ஸ்டிராங்’ என்ற புதிய வகை பீர் பாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் தீபாவளியை ஒட்டி, நேற்று முன்தினம் முதல் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பீர் பாட்டிலின் விலை ரூ.160 ஆகும்.

இதேபோல் மற்றொரு ரகமாக ‘காட்பாதர்’ என்ற பீர் பாட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.. இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்களுக்கு வந்துள்ளன.

வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?